×

பஸ் மோதியதில் முதியவர் பலி

தேனி, டிச. 21: தேனி அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கவுண்டர் மகன் ராமு(60). இவர் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது தேனி நோக்கி விரைவாக வந்த அரசு பஸ் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இறந்து போன முதியவர் ராமுவின் மகன் பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரான சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்த கருத்தபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஸ் மோதியதில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Theni ,Ramu ,Chinnakaundar ,Alagapuri ,National Highways Authority of India ,Periyakulam ,Theni… ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளித்து தற்கொலை திருமண ஏக்கத்தால் விரக்தி