×

சீர்காழி திட்டை ஊராட்சியில் 29 பேருக்கு பட்டா வழங்க வேண்டும்

 

சீர்காழி,டிச.20: சீர்காழி திட்டை ஊராட்சியில் 29 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை காலனி தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 29 பேர் வசித்து வருகின்றனர் இவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சீர்காழியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாமிற்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் குளங்கரை பகுதியில் வசிக்கும் நடராஜன் தலைமையில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை. பலமுறை தாசில்தாரிடம், மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே 29 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனர்.

The post சீர்காழி திட்டை ஊராட்சியில் 29 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi Thittai Panchayat ,Sirkazhi ,Adi Dravida Welfare Department ,Kulangarai Colony Street ,Thittai Panchayat ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே நடந்த மாநில அளவிலான...