- பழனி
- வருமானவரித் துறை
- சத்திரப்பட்டி
- செந்தில்குமார்
- பண்ணையாக்கர் தோட்டம்
- பழனி, திண்டுக்கல் மாவட்டம்
- தின மலர்
பழநி: பழநி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டி, பண்ணையக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). கடந்த 2017 முதல் ராயர் சிட்பண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்யாவதியும் இந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் ரூ.1 கோடி வரை ஏலச்சீட்டுகளும், தமிழ்நாடு தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரியளவில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் பாஜ மாநில முக்கிய நிர்வாகி ஒருவருக்கு உறவினர் என்றும் கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக புகார் வந்த நிலையில் நேற்று செந்தில்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 20 பேர் நுழைந்து பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதேபோல ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையை சேர்ந்த சகோதரர்களான குழந்தைவேல், முருகன் நகைக்கடை, பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றனர்.நேற்று காலை 10 மணியளவில் இவர்களது நகைக்கடை, வீடு, பெட்ரோல் பங்க்கில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்களுக்கு செந்தில்குமார் பைனான்ஸ் செய்துள்ளதாகவும், இதனால் ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
The post முறைகேடாக சொத்து குவிப்பு தொழிலதிபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.