×

ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்

 

ஜெயங்கொண்டம், டிச. 18:ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், இராங்கியத்தில், கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்கழக செயலாளர் ரெங்க.முருகன் தலைமை வகித்தார்.

முன்னதாக ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர் இராமலிங்கம் வரவேற்றார். தலைமை கழக சொற்பொழிவாளர் பவானி கண்ணன், திமுக இளம் பேச்சாளர் ஸ்ரீலேகா, தலைமைக்கழக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மனுநீதிசோழன் (இளைஞரணி) நன்றி தெரிவித்தார்.

The post ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Andimadam North Union DMK ,Jayankondam ,Jayankondam Assembly Constituency ,Rangiyam ,Dinakaran ,
× RELATED சாதனை விளக்க கூட்டம்