- காங்கிரஸ் கட்சி
- பெரம்பலூர்
- அமித் ஷா
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அம்பேத்கர்
- டாக்டர்
- பாராளுமன்றம்...
- தின மலர்
பெரம்பலூர், டிச. 21: பெரம்பலூரில் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாராளுமன்றத்தில் பேசும் போது டாக்டர் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப் பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் ஆலோசனையின்படி, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் நேற்று(20ஆம்தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக் கறிஞர் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனிச் சாமி, குன்னம் சட்டமன்றத் தொகுதி தலைவர் பார்த்திபன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post அமித்ஷாவைக் கண்டித்து பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.