- செட்டிகுளம் லிட்டில் ஃப்ளவர் பள்ளி
- Badalur
- 68வது தேசிய பேஸ்பால் போட்டி
- இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு
- பிலாஸ்பூர்
- சத்தீஸ்கர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
பாடாலூர், டிச.19: இந்திய பள்ளிகளின் விளையாட்டு சம்மேளனம் சார்பில் 68 வது தேசிய பேஸ்பால் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் 19ம் தேதி (இன்று) துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. 14 வயதினருக்கான இந்த போட்டியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன. தமிழக அணியில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அகமது நபில், ரித்தின், பிரதீபா, சுசிவதனி, நந்தினி, சபிக்ஷனா மற்றும் ஜெயவர்ஷினி ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர். தேசிய அளவிலான பேஸ்பால் போட்டியில் தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாம் முடிந்து மாணவர்கள், சத்தீஸ்கர் புறப்பட்டு சென்றனர். அவர்களை பள்ளி தாளாளர் தமிழ்வாணன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
The post செட்டிகுளம் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள் 7 பேர் தேர்வு appeared first on Dinakaran.