×

வேளச்சேரியில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் படுகாயம்

வேளச்சேரி: வேளச்சேரி 100 அடி சாலையில் நேற்று மதியம் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்து சென்றவர், 2 பைக், ஒரு ஆட்டோ மற்றும் இளநீர் கடை நடத்தி வந்தவர் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் இளநீர் வியாபாரி, ஆட்டோ டிரைவர், இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர், நடந்து சென்றவர் என 4 பேர் படுகாயமடைந்தனர்.

வாகனங்களும் சேமடைந்தன. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய திருவொற்றியூரை சேர்ந்த கார் டிரைவர் பிரகதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வேளச்சேரியில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Kindi ,
× RELATED சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 2025...