×

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

மதுரவாயல்: ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் பெரம்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் சங்குவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கையில் பெரிய பார்சலுடன் ரயிலில் இருந்து கீழே இறங்கிய வாலிபர், போலீசாரை பார்த்ததும் பார்சலை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றார். அவரை விரட்டி பிடித்தனர்.

பின்னர், அந்த பார்சலை சோதனை செய்தபோது 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (26) என்பதும், இவர் கடந்த 3 வருடமாக ஒடிசாவுக்கு சென்று கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே போக்சோ, அடிதடி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, ஒரு வாலிபர் ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் பெரிய பார்சலுடன் சென்னை வந்தார். பின்னர் அவர் கடலூர் மாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறியபோது போலீசார் பிடித்து, அவரிடம் இருந்த பார்சலை சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தமிழரசன் (26) என்பதும், இவர் தினமும் ஆந்திராவுக்கு சென்று கஞ்சா கடத்தி வந்து, பண்ருட்டியில் விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Maduravoyal ,Annanagar Prohibition Division ,Assistant Commissioner ,Sangu ,Perambur ,Odisha ,Andhra Pradesh ,
× RELATED சென்னை, மதுரவாயலில் கல்லூரி துணை பேராசிரியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை