×

மது குடிக்க பணம் தராத டிரைவர் மீது தாக்குதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த திருமலை பிரியா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). தனியார் கம்பெனியில் கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷின் மற்றொரு நண்பரான அம்பத்தூர், வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்த கார்த்திக் (29) என்பவர் மது குடிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். சுரேஷ் கொடுக்க மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திக், சுரேஷின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் துடித்த சுரேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து சென்ற அம்பத்தூர் போலீசார், கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மது குடிக்க பணம் தராத டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Suresh ,Tirumala Priya Nagar ,Ambattur Rocky Theater ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாலையில்...