×

முதல்வர் தலைமையில் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்

சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டுவர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் தலைமையில் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,PRIME ,MINISTER ,Chennai ,Chief Mu. K. ,Secretary General ,Duraimurugan ,Dimuka Executive Committee ,Stalin ,Executive Committee of Dimuka ,22nd ,Dinakaran ,
× RELATED திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்