×

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்

சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கும் போதும், எக்ஸ்ரே எடுக்கும் போதும் பணத்தை செலுத்தி சேவை பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக இம் மருத்துவமனையில் புதிதாக பிஓஎஸ் இயந்திரம் மூலம் க்யூஆர் கோடு அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நோயாளியை சேர்க்கும் இடத்தில், எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில், வெளி மாநிலத்திலிருந்து வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போது பணம் செலுத்தப்படும் இடத்தில், புற நோயாளிகள் பிரிவு என 4 இடத்தில் இந்த புதிதாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய பணத்தை மோசடி கணக்கெழுதி கையாடல் செய்ததாக பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Chennai ,Rajiv Gandhi Government General Hospital ,
× RELATED அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம்...