×

மருத்துவக் கழிவு கொட்டிய விவகாரம்: வழக்குப்பதிவு

நெல்லை: கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மூலம் மருத்துவக் கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் சிசிடிவி காட்சிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை ஆட்சியர் உறுதி அளித்தார்.

The post மருத்துவக் கழிவு கொட்டிய விவகாரம்: வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kodaganallur Pazhavur ,Pollution Control Board ,Rural Development Department ,Dinakaran ,
× RELATED மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம்...