×

கருமத்தம்பட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சிக்கினார்


சோமனூர்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஃபிக் (41). தற்போது, கருமத்தம்பட்டி புதூர் பகுதியை அடுத்த செல்வ விநாயகர் கோவில் பின்புறம் வசித்து வருகிறார். இவர், வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்று விசாரித்த போது ரஃபிக் தனது வீட்டு அருகே 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடியை வளர்த்து வருவது தெரியவந்தது. மேலும், ரஃபிக்கின் வீட்டில் 30 கிராம் கஞ்சா பொடியும், இலையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

The post கருமத்தம்பட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Karumathampatty ,Rafik ,Devadanapati Periyakulam ,Theni District ,Selva Vinayagar Temple ,Budur ,Karumathampatty Police Station ,
× RELATED கேரள லாட்டரி விற்றவர் கைது; வீட்டில் ₹2.25 கோடி சிக்கியது