×

அல் உம்மா இயக்க தலைவர் பாஷா மரணம்

கோவை: கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் உக்கடம் ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்த ‘அல் உம்மா‘ இயக்கத் தலைவர் எஸ்.ஏ. பாஷா (84)வுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மத்திய சிறையில் இருந்த பாஷாவுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் உடல் நலம் பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாஷா நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

The post அல் உம்மா இயக்க தலைவர் பாஷா மரணம் appeared first on Dinakaran.

Tags : Pasha ,Al ,Umma ,Goa ,AL UMMA ,UQADAM ,ROSE AVENUE AREA ,S. A. Pasha ,Executive ,
× RELATED கோவையில் தடை மீறி பேரணி அண்ணாமலை, வானதி கைது