×

நிலத்தை அபகரித்ததால் மூதாட்டியை கொலை செய்தேன்

தூத்துக்குடி,டிச. 16: தூத்துக்குடி 1ம் ரயில்வே கேட் முகமது சாதலிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி செல்லம்மாள் (82). தம்பதிக்கு 7 குழந்தைகள். நேற்று முன்தினம் மாலை இவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். இதில் முகத்தை தலையணையால் அழுத்தி மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இதில் செல்லமாளின் கணவரது தம்பியான கணேசனின் மகன் பொன்ராஜ் (42) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

அப்போது அவர் நிலத்தை அபகரித்ததால் மூதாட்டியை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார். மேலும் அவர், எங்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய பகுதியை செல்லம்மாள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டிக்கொண்டனர். இதைத் தட்டிக்கேட்டதால் அவர்களுடன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. மேலும் எனக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனது பெரியம்மா செல்லம்மாள் செய்வினை வைத்ததால் தான் என் உடல் நலம் பாதிக்கப்பட்டது என்று நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, காத்திருந்தேன். சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்ததால் வீட்டிற்குள் நுழைந்து அவரது முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

The post நிலத்தை அபகரித்ததால் மூதாட்டியை கொலை செய்தேன் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chellammal ,Ramachandran ,Mohammed Satalipuram ,Thoothukudi 1st Railway Gate ,Vadapagam police ,
× RELATED விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி