தூத்துக்குடி, டிச. 24: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ₹1 லட்சம் வீதம் மொத்தம் ₹3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பயனாளிகளுக்கு வழங்கினார்.
The post விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி appeared first on Dinakaran.