×

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம்

 

ஊட்டி, டிச. 15: நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலை கல்லூரியில் நீலகிரி மட்டுமின்றி ச சமவெளி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சுமார் 4500 பேர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நேற்று 2024-2025ம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்த்துறை இணை பேராசிரியர் முருகேசன் வரவேற்றார்.

மின்னணுவியல் துறை இணை பேராசிரியர் ஓம் முருகா பெற்றோர் ஆசிரியர் கழக முக்கியத்துவம் குறித்து பேசினார். கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் பெற்றோர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து விலங்கியல்துறை பேராசிரியர் சனில் விளக்கி பேசினார்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தினமும் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார். மேலும் பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை பேராசிரியர்களிடம் கேட்டறிந்தனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Government Arts College ,Parent Teacher Association ,Nilgiris ,Ooty Government Arts College ,Parent ,Teacher ,Association ,Dinakaran ,
× RELATED அடிப்படைவசதிகளை நிறைவேற்றக்கோரி அரசு கலைகல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்