×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கஜகஸ்தான் பெண்ணுடன் அரியலூர் வாலிபர் திருமணம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கடலூர் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாள் நடைபெற்றது. இம்மாநாட்டில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ₹5 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும், வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்த குடும்பங்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்க வேண்டும், வட்டியில்லா கடனாக 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அக்கட்சியின் உறுப்பினரான பெண்ணாடம் அருகே அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரபாகரன் (33) தற்போது கஜகஸ்தான் நாட்டில் விமான பராமரிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கு உடன் பணிபுரியும், அந்த நாட்டை சேர்ந்த ஷயக்மேதோவ் மகள் அய்டானா (29) என்பவரை காதலித்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு, தற்போது இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த இந்த மாநாட்டு மேடையில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கஜகஸ்தான் பெண்ணுடன் அரியலூர் வாலிபர் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Kazakhstan ,Marxist Communist conference ,Virudhachalam ,24th Cuddalore District Conference ,Marxist Communist Party ,Virudhachalam, Cuddalore district ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற...