சிதம்பரம்:சிதம்பரத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் நகர பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நடராஜர் கோயில் மேற்கு கோபுரத்தில் உள்ள 14 துவாரக பாலகர் சிலைகளில், இரண்டாவது அடுக்கிலுள்ள 2 சிலைகளும் திடீரென கீழே விழுந்தது. இதில் முதல் சிலையில் உள்ள கால் உடையவே, மேற்கு கோபுர வாசல் வழியாக வந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யார் மீதும் சிலை விழவில்லை. இதை தொடர்ந்து அங்கு வந்த கோயில் பொது தீட்சிதர்கள் உடனே மேற்கு கோபுர சன்னதி வாயில் பகுதியில் பக்தர்கள் செல்லாதவாறு அடைத்து, உடனடியாக அந்த சிலைகளை அகற்றினர். கார்த்திகை தீபத்துக்கு தீட்சிதர்களும், பக்தர்களும் தயாரான நிலையில் சிலை உடைந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது appeared first on Dinakaran.