சென்னை : சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வு விசாரித்தது. மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 20 ஆண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக்கூடாது என்றனர். இதை ஏற்ற நீதிபதிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.
The post எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.