×

விமான நிலையத்தில் தாய்லாந்து சுற்றுலா செல்ல வந்த பயணி மரணம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு, தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் ஏர் ஏசியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளுக்கு, குடியுரிமை சோதனை நடந்தது.

அப்போது, நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த அற்புத சகாயராஜ் (52) என்பவர், தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வதற்கு வந்திருந்தார். இவர்கள், குடியுரிமை சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அற்புத சகாயராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து அற்புத சகாயராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மூன்று பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

The post விமான நிலையத்தில் தாய்லாந்து சுற்றுலா செல்ல வந்த பயணி மரணம் appeared first on Dinakaran.

Tags : Thailand ,Chennai ,Air Asia ,Bangkok ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியர்களுக்கு...