×

நீர்பிடிப்பு பகுதியில் கொட்டியது கனமழை அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பியது

Ayyampalayam, Heavy rain ,maruthanithi Dam*கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பட்டிவீரன்பட்டி : நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யம்பாளையம் மருதாநதி அணை. இதன் மொத்த உயரம் 72 அடியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது.

தற்போது அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து முழு கொள்ளவான 72 அடியை எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் அணை 3 முறை முழுகொள்ளவை எட்டியது குறிப்பிடத்தக்கதாகும். அணைக்கு 351 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.

அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 351 கனஅடி உபரி நீர் பிரதான கால்வாய் வழியாக நேற்று முன்தினம் திறந்து விடப்பட்டது. முன்னதாக அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது: அணையில் தற்போது 195 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளதாலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகின்ற காரணத்தினால் அணையின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

கடந்த மாதம் அணையிலிருந்து பாசனத்திற்காக அணை திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மருதாநதி அணை தொடர்ந்து 3 வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீர்பிடிப்பு பகுதியில் கொட்டியது கனமழை அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Ayyampalayam Marudhanathi dam ,Pattiveeranpatti ,
× RELATED சபரிமலையில் இருந்து திரும்பியபோது...