- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பிஎம்எஸ்ஆரி
- மத்திய அமைச்சர்
- எம். பி இன்டர்ஃபேஸ்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- யூனியன்
- அரசாங்கங்கள்
- தமிழ்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு அரசு
- திமுகா
- எம்பி கிரிராஜன்
- தின மலர்
சென்னை: கல்விக்கான ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிதி ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்றும், மாணவர் பதிவு சதவீதமான ஜிஇஆர் மற்றும் உட்கட்டமைப்பின் செயல்திறன் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி அளித்துள்ள பதிலில், பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமான சம்க்ரா சிக்ஷா அபியான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சத்துணவு திட்டமான பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான், 15 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களை கண்டறிவதற்கான உல்லாஸ் ஆகிய திட்டங்களின் கீழ் 2023-24ம் நிதியாண்டு வரை தமிழ்நாடு அரசிற்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை ஏதும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2020ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையை ஏற்று செயல்படும் பள்ளிகளை உள்ளடக்கிய பிரதான் மந்திரி – (பிஎம்ஸ்ரீ) திட்டத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை இணையவில்லை என்றும் இணை அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்துவதை தடுப்பதற்கான தேசிய மெரிட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை எனவும், அதற்கு பதிலாக அந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணையவில்லை: திமுக எம்பி கிரிராஜன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.