×

தொடர் மழை எதிரொலியாக ஆண்டிபட்டியில் கடும் பனி மூட்டம்


ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரங்க்களில் தொடர் மழை காரணமாக கடும் பனிமூட்டம் நிலவியது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வந்ததால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தொடர் மழை காரணமாக நேற்று காலை ஆண்டிபட்டி மற்றும் க.விலக்கு சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆண்டிபட்டி – வருசநாடு சாலை, ஆண்டிபட்டி- வைகை அணை சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அடர் பனிமூட்டம் ஏற்பட்டது.

சாலைகள் மட்டுமின்றி விவசாய நிலப்பரப்புகளையும், குடியிருப்பு பகுதிகளையும் பனி மூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த பனிமூட்டத்தால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது. அதிகாலை நேரத்தில் உருவான பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது. இந்த பனிமூட்டம் காரணமாக ஆண்டிப்பட்டி மற்றும் க.விலக்கு சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

The post தொடர் மழை எதிரொலியாக ஆண்டிபட்டியில் கடும் பனி மூட்டம் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Theni district ,Dinakaran ,
× RELATED தொடர் மழை எதிரொலியாக ஆண்டிபட்டியில் கடும் பனி மூட்டம்