குன்னம், டிச. 13: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரமநல்லூர் கிராமத்தில் ஏரி நிரம்பி அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு முதல் கனமழை இந்தப் பகுதியில் பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடைசியில் உள்ள வயலூர் வயலப்பாடி வசிஷ்டபுரம் ஊராட்சிகள் மிகவும் தாழ்வான பகுதிகளாகும்.
கனமழையால் வீரமநல்லூர் ஏரி நிரம்பி அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் செல்வராணி வரதராஜன் வீடு உட்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் தெருகளிலும் தண்ணீர் புகுந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 25 பேர் வருவாய்த்துறையினரால் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் மற்றும் குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வீரமநல்லூர் கிராமத்தில் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் appeared first on Dinakaran.