பந்தலூர், டிச.13 : பந்தலூர் அருகே மானூர் பகுதியில் பழுதடைந்த கிணற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மானூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மானூர் கோயிலுக்கு பின்புறம் கடந்த 2001-2002 ம் ஆண்டின் சேரங்கோடு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கிணறு தற்போது ரிங்குகள் உடைந்து சேதமாக இருந்து வருகிறது.
அதனால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த குடிநீர் கிணற்றை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே கோடையில் குடிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் குடிநீர் கிணற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மானூர் கிராமத்தில் பழுதடைந்த கிணற்றை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.