×

வேன்-கார் மோதல் 2 மாத பேரனுடன் தாத்தா, பாட்டி பலி

மதுக்கரை: கேரளா மாநிலம் பட்டணம் திட்டா பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (60). இவர் மனைவி ஷீபா (55), மருமகள் எலீனா தாமஸ் (30), பிறந்து 2 மாதமே ஆன பேரன் ஆரன் ஆகியோருடன் காரில் பெங்களூரைசென்று கொண்டிருந்தார். நேற்று காலை 11 மணியளவில் சேலம்-கொச்சின் பைபாஸ் ரோட்டில் கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த போடிபாளையம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் எதிரே கரூரை சேர்ந்த சக்திவேல் (29) என்பவர் ஓட்டி வந்த வேன் மீது மோதியது. இதில் ஜேக்கப் ஆபிரகாம், ஷீபா, குழந்தை ஆரன்‌ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post வேன்-கார் மோதல் 2 மாத பேரனுடன் தாத்தா, பாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Jacob Abraham ,Pattanam Thitta ,Kerala ,Bangalore ,Sheeba ,Elena Thomas ,Aran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு