- திருப்புத்தூர் தாலுக்கா
- திருப்புத்தூர்
- தேவகோட்டை
- ஆயுஷ் வெங்கட் வத்ஸ்
- நாகனேந்தல் கண்மாய்
- பில்லியார்பட்டி
திருப்புத்தூர், டிச. 12: திருப்புத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டி கிராமம் நாகனேந்தல் கண்மாயில் உபரிநீர் செல்வதற்கு கால்வாய் அமைப்பது தொடர்பாக நேற்று தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் ஆய்வு மேற்கொண்டார். கடந்த காலங்களில் மழை நீர் கண்மாயில் நிரம்பி வீடுகளில் சூழ்ந்திருப்பதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கைகளை ஆய்வு செய்து வானிலை மைய அறிவிப்பின்படி டிச.12, 13, 14ம் தேதிகளில் முன்னெச்சரிக்கையாகவும், மணல் மூட்டைகள், ஜேசிபி வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, திருப்புத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரகுமார், காதர் முகைதீன், உதவி செயற் பொறியாளர் ராமசாமி, இளையாத்தங்குடி வருவாய் ஆய்வாளர் பாக்யா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
The post திருப்புத்தூர் தாலுகாவில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சார் ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.