×

தேவகோட்டை அருகே கதம்ப வண்டு கடித்து 10 பேருக்கு பாதிப்பு

தேவகோட்டை, டிச. 7: தேவகோட்டை அருகே, 100 நாள் வேலை பணியின்போது கதம்ப வண்டுகள் கடித்ததில் 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கண்மாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணியில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கதம்ப வண்டுகள் புதரில் இருந்து வெளியேறி தொழிலாளர்களை கடித்தன.

இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சரவணன் என்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கதம்ப வண்டுகள் கடித்ததில் 100 வேலை திட்ட தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தேவகோட்டை அருகே கதம்ப வண்டு கடித்து 10 பேருக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Devakota ,Devakotta ,Kanmai ,Tenneervyal ,Devakottai ,
× RELATED திருப்புத்தூர் தாலுகாவில் மழை...