- திருவாரூர்
- ராஜா கணேஷ்
- முக்தி விநாயகர் கோவில் தெரு, மடபுரம், திருவாரூர்
- சேகர்
- நீலக்குடி கிராமம்
- திருவாரூர்...
திருவாரூர், டிச. 17: திருவாரூர் மடப்புரம் முக்தி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜ கணேஷ் (42). நேற்று முன்தினம்இவரது 3 வயது பெண் குழந்தை ஒன்று வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோதுதிருவாரூர் நீலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி லதா (47) என்பவர் வாடகைக்கு வீடு கேட்பது போல் ராஜ கணேஷ் வீட்டிற்கு வந்தபோது குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை கண்டார்.
பின்னர் லதா, குழந்தையின் காதில் கிடந்த அரை கிராம் பவுன் தோடு மற்றும் காலில் கிடந்த வெள்ளி கொலுசு ஜோடியினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனை அடுத்து ராஜ கணேஷ் வீட்டில் இருந்தவ ர்கள் மற்றும் அக்கம் பக்கத் தினர் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து திருவாரூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லதாவை கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து அரை கிராம் பவுன் தோடு மற்றும் கொலுசு ஜோடியையும் பறிமுதல் செய்தனர்.
The post குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.