×

ஊட்டி-கோத்தகிரி சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

 

ஊட்டி, டிச.12: நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து ஊட்டியை இணைக்கும் முக்கிய சாலையாக தற்போது ஊட்டி-கோத்தகிரி சாலை மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இச்சாலையை வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் ஜனாதிபதி, கவர்னர் மற்றும் முதலமைச்சர் உட்பட முக்கிய தலைவர்களும் பயன்படுத்தி விஐபி சாலையாகவும் இச்சாலை இருந்து வருகிறது. இதனால் இச்சாலையை எப்போதும் நெடுஞ்சாலைத்துறையினர் சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர். இச்சாலையில் பழுது ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்கப்பட்டுவிடும்.

ேமலும், சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களில் தூர் வாரப்பட்டும் சீரமைக்கப்பட்டும் காணப்படும்.ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் மைநிலை வரையில் சாலை சற்று பழுதடைந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 கோடியில் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இச்சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாலை சீரமைப்பு பணிகளை நீலகிரி கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் ஆய்வு மேற்கொண்டார். ெதாடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது, ‘ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொட்டபெட்டா சந்திப்பு முதல் மைநிலை சந்திப்பு வரையில் 4 கி.மீ., தூரம் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இச்சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.

 

The post ஊட்டி-கோத்தகிரி சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kotagiri ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை...