×

10 அடி உயர கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி காயம்

 

குன்னூர், டிச.12: குன்னூர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் தஸ்து(38). சுமைக்கு தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே சித்தி விநாயகர் கோயில் தெரு உள்ள 10 அடி உயர கட்டிடத்தில் மதுபோதையில் அமர்ந்துள்ளார். அப்போது போதையில் அங்கும் இங்கும் தள்ளாடிய நிலையில் திடீரென அவர் அந்த கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்த வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கீழே விழுந்த அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post 10 அடி உயர கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி காயம் appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Dastu ,Palliwasal ,Siddhi Vinayagar Koil Street ,Dinakaran ,
× RELATED குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில்...