×

குட்டியுடன் 2 யானைகள் நுழைய முயற்சி விரட்டியடித்த வனத்துறையினர் குடியாத்தம் அருகே கிராமத்திற்குள்

குடியாத்தம், டிச. 12: குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்ட மிட்டா, மோர்தனா, வி டி பாளையம், பூசாரி வலசை, கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகிறது. இதனை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று குடியாத்தம் அடுத்த கே.மோட்டூர் கிராமத்தில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் பயங்கர பிளிறும் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளது. அப்போது, வன ேராந்து பணியில் இருந்த வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் மலை அருகில் உள்ள சில வாழை மற்றும் பப்பாளி மரங்களை யானைகள் மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். யானைகளை விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

The post குட்டியுடன் 2 யானைகள் நுழைய முயற்சி விரட்டியடித்த வனத்துறையினர் குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் appeared first on Dinakaran.

Tags : Gudiyatham ,Gudiyatham forest ,Thanakondapalli ,Chinakunda ,Veerishettipalli ,Bharatharami ,Kotta Mitta ,Morthana ,V. T. Palayam ,Poosari Valasai ,Kathirkulam ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு