வேலூர், டிச.12: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுலவர்களுக்கு, அரசு தேர்வுகள் இயக்குனர் லதா, அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) பிளஸ்1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த பட்டியலில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அவற்றை வரும் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சரி செய்யப்பட்டு, பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் பதிவெண்ணுடன் தற்போது எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு துணை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிளஸ்1 பொதுத்தேர்வு இறுதிபெயர் பட்டியல் வெளியீடு அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.