×

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 11, 12, 13, 16, 17 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் டிச 13, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Centre ,Chennai ,South East Bank Sea region ,Orange ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்