×

கொள்ளிடம் அருகே சாலையில் முறிந்து விழும் ஆபத்தான மரக்கிளை

 

கொள்ளிடம்,டிச. 11: கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து குன்னம், பெரம்பூர், சென்னியநல்லூர் வழியாக பனங்காட்டங்குடி செல்லும் நெடுஞ்சாலையில் புத்தூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது.அப்பகுதியில் சாலையின் குறுக்கே மேல்பகுதியில் நீண்டு வளர்ந்துள்ளன. பழமையான பெரிய தூங்குமூஞ்சி மரக்கிளைகள் அடர்த்தியாக இருந்து வருகின்றன. சாலையின் குறுக்கே நீண்டு வளர்ந்துள்ள மரக்கிளைகள் பெரியதாகவும் பழமையான மரக்கிளைகளாகவும் இருந்து வருகின்றன. இந்த மரக்கிளைகள் அவ்வப்போது லேசான காற்று வீசும் போதெல்லாம் முறிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இதில் பட்டுப்போன மரக்கிளைகளும் இருந்து வருகின்றன. இந்த மரக்கிளைகள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மரக்கிளையை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொள்ளிடம் அருகே சாலையில் முறிந்து விழும் ஆபத்தான மரக்கிளை appeared first on Dinakaran.

Tags : Kollid ,Puttur ,Kollidam ,Gunnam ,Perambur ,Sennianallur ,Panangatangudi ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை