×

பெரம்பலூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

பெரம்பலூர், டிச.27: பெரம்பலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 3பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (26ஆம்தேதி) பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெரம்பலூர் போலீஸ் எஸ்ஐ பிச்சைமணி மற்றும் அவரது குழுவினர், சிறப்பு ரோந்துப்பணி மேற் கொண்டனர்.

அப்போது காலேஜ் பஸ்டாப் அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண் டிருந்த சிலோன் காலனி, புதிய அகதிகள் முகாமை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரபு (19), கவுள்பாளையம் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த தன சேகரன் மகன் விஷ்ணு (18), பெரம்பலூர் கம்பன் தெரு, திரையரங்கம் எதிரே வசிக்கும் பழனிச்சாமி மகன் பிரவீன்(19) ஆகிய 3 நபரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்செய்தனர். பின்னர் மூவரையும் பெரம்பலூர் எஸ்ஐ பிச்சைமணி பெரம் பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கோ தகவல் தெரி விக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் காவல்துறை சார்பாக தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

The post பெரம்பலூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District ,SP ,Adarsh Passera ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...