* ஐஎஸ்எல் கால்பந்து ஐதராபாத்துடன் சென்னை மோதல்
சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகளில் 13 அணிகள் பங்கேற்கின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று மாலை 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னையின் எப்சி அணி எதிர்கொள்கிறது.
ஐஎஸ்எல் தொடரில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ளது. இவற்றில் 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ம் இடத்தில் சென்னை உள்ளது. ஐதராபாத் அணி 10 போட்டிகளில் ஆடி, 2 வெற்றி, 7 தோல்வி, 1 டிராவுடன் பட்டியலில் 12ம் இடத்தில் உள்ளது.
* ஆஸியுடன் 3வது டெஸ்ட் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு
பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி பிரிஸ்பேன் நகரில் துவங்குகிறது. இந்த போட்டியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக சுந்தரின் ஆட்டம் சிறப்பாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேசமயம் சுழல் பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு மாற்றாக சுந்தரை களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் கிரிக்கெட் வல்லுர்கள் இடையே காணப்படுகிறது. இதற்கிடையே 3வது டெஸ்டின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
The post செய்தித் துளிகள்… appeared first on Dinakaran.