×

நாளை தொடங்குகிறது விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட்

விஜயநகரம்: இந்தியாவின் முக்கிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் அரியானா, முன்னாள் சாம்பியன்கள் தமிழ்நாடு, மும்பை, கர்நாடாகா, ரயில்வே, சவுராஷ்டிரா, டெல்லி, வங்காளம், குஜராத், இமாச்சல் பிரதேசம் உட்பட 38 அணிகள் இந்தப் போட்டியில் களம் காணுகின்றன. இந்த அணிகள் மொத்தம் ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடக்கின்றன. நாக் அவுட் சுற்று ஆட்டங்களான காலிறுதி சுற்று ஆட்டங்கள் ஜன.9, 11, 12 தேதிகள் நடைபெறும், தொடர்ந்து ஜன.15, 16 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும், ஜன.18ம் தேதி இறுதி ஆட்டமும் நடத்தப்படும்.

லீக் சுற்று ஆட்டங்கள் ஜெய்பூர், ஐதராபாத், விஜயநகரம், விசாகப்பட்டினம், அகமதாபாத், ஜெய்பூர், மும்பை, நவி மும்பை ஆகிய நகரங்களில் நடக்கும். தமிழ்நாடு இடம் பெற்றுள்ள டி பிரிவில் சண்டீகர், உத்ரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, மிசோராம், சட்டீஸ்கர் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு தனது முதல் ஆட்டத்தில் சண்டீகர் அணியை நாளை விஜயநகரத்தில் எதிர்கொள்கிறது. பிரிவு சி-ல் இடம் பெற்றுள்ள அருண் கார்த்திக் தலைமையில் புதுச்சேரி நாளை சவுராஷ்டிராவுடன் மோதுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் அரியானா தனது முதல் ஆட்டத்தில் நாளை குஜராத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் நடக்கிறது.

The post நாளை தொடங்குகிறது விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இன்டர்கான்டினென்டல் கால்பந்து...