சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பைப்பிங் பேப்ரிகேட்டர், பைப்பிங் பிட்டர், ஸ்ட்ரக்சர் பேப்ரிகேட்டர், ஸ்ட்ரக்சர் பிட்டர், மில்ரைட் பிட்டர், கிரைண்டர், கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் போர்மேன் தேவைப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட வெல்டர் பணிக்கு ரூ. 40,000 முதல் ரூ. 78,000 வரை, பைப்பிங் பேப்ரிகேட்டர் ரூ. 40,000 முதல் ரூ. 51,000 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படும். www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண் 044-22502267 மற்றும் வாட்ஸ்அப் எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
The post ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.