- வேளாண் துறை
- உடுமலை
- வர்வரா
- குமரலிங்கம்
- பாப்பான்குளம்
- அக்ரகர கன்னடிபுத்தூர்
- வேதப்பட்டி
- ஜோதம்பட்டி
- கரத்தோஜாவு
- மாட்டாதகுளம்
- விவசாய துறை
உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில் அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம்,அக்ரகார கண்ணாடிப்புத்தூர்,வேடப்பட்டி,ஜோத்தம்பட்டி,காராத்தொழவு ஆகிய வருவாய் கிராமங்களில் 1500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.மேலும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நாற்றாங்கல் விடும் பணிகள் துவங்கி நடவு பணிகளுக்கு தயராக உள்ளது.
நெற்பயிரில் பயிர் பாதுகாப்புக் தொழில்நுட்ப மேலாண்மை பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் தேவி கூறியதாவது:நெற்பயிரிடும் விவசாயிகள் விதைப்பு பணியின் போது விதை நேர்த்திக்கு பைரோகுளின் 2 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 2 கிராம் அல்லது பாசில்லஸ் சப்டிலீஸ் 10 கிராம் ஒருகிலோ விதைக்கு விதைநேர்த்தி மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வதால் மண் மற்றும் பூஞ்சாண நோயிலிருந்து நாற்றுகள் நன்கு வேர் பிடிப்புடன் வளரும் எனவும், நடவு முன்பு வேப்ப புண்ணாக்கு 50 கிலோ மற்றும் ஏக்கருக்கு அடியுரத்துடன் கலந்து உழவு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், நடவுக்கு பிறகு நெற்ப்பயிருக்கு மேலுரமாக யூரியா 1 மூட்டை மற்றும் காம்ளாக்ஸ் உரம் ஒரு மூட்டை என்ற அளவில் ஏக்கருக்கு அளிக்க வேண்டும்.
பின்பு நுண்ணூட்ட கலவை ஏக்கருக்கு 5 கிலோ அளவில் பயன்படுத்துவதால் அதிக மணிப்பிடிப்பு நல்ல வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் நடவுக்கு பிறகு 30 நாட்கள் பிறகு ஜீங்க் சல்பேட் உரம் 10 கிலோ மற்றும் ஏக்கருக்கு அளிப்பதன் மூலம் அதிகளவு தூர் பிடித்தல் உண்டாகி அதிக மகசூலை அளிக்கிறது.
மேலும், தண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகப்படியான தழைச்சத்து உரங்களை அளிப்பதை குறைத்து பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அளிக்க வேண்டும். தண்டுப்புழு தாக்குதலை குறைக்க குளோரோனிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்சி ஏக்கருக்கு 60 மிலி அல்லது குளோரன்ட்ரலிப்ரோல் 0.4 % ஏக்கருக்கு 4 கிலோ அல்லது கார்போசல்பான் 25 சதவீதம் ஈசி ஏக்கருக்கு 350-400 மிலி தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம். அல்லது டிரைக்கேகேர்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணி 2 சிசி ஏக்கருக்கு பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுவை கட்டுபடுத்த அசிப்பேட் 75 % SP ஏக்கருக்கு 250- 400 மிலி அல்லது பிப்ரோனில் 8D சதவீதம் WG ஏக்கருக்கு 20 -25 கிராம் அல்லது புளுபென்டமைடு 30.35 சதவீதம் எஸ்சி ஏக்கருக்கு 20 கிராம் அல்லது பாசலோன் 35 சதவீதம் ஈசி ஏக்கருக்கு 600 மிலி அல்லது தயோமித்தாசிம் 25 சதவீதம் WG ஏக்கருக்கு 40 கிராம் அளவில் தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post நெற்பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் துறை விளக்கம் appeared first on Dinakaran.