×

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

சென்னை: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக இருக்க கூடிய தமிழக கேடர்ட் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க கூடிய சக்திகாந்த தாஸ் 2018-ம் ஆண்டில் இருந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் நிதிசார்ந்த கொள்கைகளை வடிவமைப்பதில் ரிசர்வ் வங்கி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்பட்டுவருகிறது.

தற்போது ஆளுநராக இருக்க கூடிய சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே தற்போது 26-வது ஆளுநராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் கேடர்ட் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 11.12.2024-ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sanjay Malhotra ,Revenue Secretary ,Governor ,RBI ,CHENNAI ,Reserve Bank of India ,Tamil Nadu ,Shaktikanta Das ,25th Governor of Reserve Bank ,Governor of ,Reserve ,Bank ,Dinakaran ,
× RELATED ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக...