×

பொது இடங்களில் உள்ள கொடிமரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறபிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: பொது இடங்களில் உள்ள கொடிமரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறபிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சித்தன் என்பவர் அதிமுகவின் பகுதி செயலாளராக உள்ளார். அவரது மனைவி நாகஜோதி 20-வது வார்டில் அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவர்கள் அதிமுகவின் 53-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கொடிகம்பம் அமைக்க மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது எந்தஒரு நடவடிக்கையும் இல்லை. மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையரை நேரில் அனுகி அனுமதி கேட்டபோது பட்டா இடங்களில் மட்டுமே கொடிகம்பம் அமைக்க அனுமதிக்க முடியும் என தெரிவித்துவிட்டார். ஆனால் நாங்கள் அனுமதி கேட்ட இடத்திற்கு அருகில் மற்ற கட்சி கம்பங்கள் உள்ளது. இந்த கொடிகம்பத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் வராது என உறுதிமொழி குடுத்தும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது பாரபட்சமான செயல் ஆகும். எனவே அதிமுக கொடிகம்பம் அமைக்க அனுமதி வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சித்தன் என்பவர் மனு தக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் பொதுஇடத்தில் உள்ள அனைத்து கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவிட கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொடிமரத்தால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, கொடிமரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தமிழக டிஜிபி-ஐ இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்த்துள்ளது.

The post பொது இடங்களில் உள்ள கொடிமரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறபிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Court ,Supreme Court ,Sidthan ,Vlangudi, Madurai ,Atamugawa ,Nagajoti ,20th Ward ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகளை விரோதியாக...