- ஜெயங்கொண்டம்
- முத்துசேர்வமடம் ஊராட்சி
- முக்குளம்
- Nellithoppu
- முதுசீர்வமடம் ஊராட்சி
- அரியலூர் மாவட்டம்
- தின மலர்
ஜெயங்கொண்டம்,டிச.9: ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் மற்றும் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பொதுமக்களுக்கு முக்குளம் கிராமத்தில் இருந்து நெல்லித்தோப்பு செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இருக்கும் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அவர்களது கட்டுபாட்டில் வைத்து உள்ளனர். இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று தகனம் செய்ய கூட வழி இல்லாமல் நான்கு புறமும் முள் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.