சென்னை: திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு இன்று(டிச.08) ஆய்வு செய்கின்றனர். திருவண்ணாமலை தீபம் மலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர்கள் குழு மலை மீது பயணம் செய்து மலையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள புறப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலை., பேராசிரியர் தலைமையிலான குழு திருவண்ணாமலையில் ஆய்வு செய்யவுள்ளது. தீபத்திருவிழாவின்போது மலை ஏற பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என முடிவு செய்ய சோதனை நடைபெறுகிறது.
The post திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு இன்று(டிச.08) ஆய்வு appeared first on Dinakaran.