×

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநருடன் அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் சென்றனர். 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ரவி, இன்று (ஞாயிறு) இரவு 8.20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார். ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலையில் முடிந்தது. இந்நிலையில் 2 நாள் அவசர பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ரவி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தனது பதவி நீடிப்பு சம்பந்தமாக பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சொந்த பயணமாகவே டெல்லி சென்றுள்ளார் என்றும் மற்றொரு தகவல் கூறப்படுகிறது.

The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor RN ,Ravi ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Air India ,Governor ,
× RELATED வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில்...