×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்து, நலஉதவி வழங்கினார். பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு நேற்று சசிகலா வந்தார். தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் அருகில் நிரம்பி வழியும் பரசனேரியை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அண்ணா நகர் மற்றும் ஜீவா நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், 150 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Sasikala ,Uthangarai ,Krishnagiri district ,Cyclone Benjal ,Parasaneri ,Dinakaran ,
× RELATED மது விற்ற பெண், தொழிலாளி கைது