×

திமுக கலந்தாய்வு கூட்டம்

 

கமுதி, டிச.7: கமுதியில் திமுக பாக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமையில், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மற்றும் துணை அமைப்பாளர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம், நந்தகோபால், ஒன்றிய கவுன்சிலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி பாக இளைஞரணி பொறுப்பாளர்களாக 67 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

The post திமுக கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,Kamudi ,Dimuka Baga ,Mudukulathur Assembly Constituency ,Baga ,Katharbatsa Muturamalingam ,MLA ,Northern Union ,Dinakaran ,
× RELATED முதல்வர் தலைமையில் 22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்