×

மாநகராட்சி பள்ளிக்கு ரூ.5.68 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு ரூ.5.68 கோடியில் புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் வடசென்னை பகுதிக்கு பல்வேறு திட்ட பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் ரூ.5.68 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பள்ளி வளாகத்தில் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்வில், ராயபுரம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி பள்ளிக்கு ரூ.5.68 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Corporation ,School ,Chief Minister ,Thandaiyarpet ,M.K.Stalin ,Corporation School ,Abbasamy Street ,Chennai Metropolitan Development Group ,North Chennai ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் உயர்நிலைப்பள்ளியில்...