உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மழை பாதித்த சாலைகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்து அனுமந்தண்டலம் கிராமத்தில் உள்ள தடுப்பணை வழியாக உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த கனமழை காரணமாக பல பகுதிகளில் சாலையோர மரங்கள் விழுந்தது. பெரும்பாலான சாலைகள் சேதமானது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நெடுஞ்சாலை ஓரத்தில் தாழ்வாக உள்ள மரக்கிளைகளும் அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post உத்திரமேரூர் அருகே மழை பாதித்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.